விசுவாச அறிக்கை:

பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன். இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியிடமிருந்து பிறந்தார். போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு, சிலுவையில் அறையுண்டு, மரித்து அடக்கம் செய்யப்பட்டார். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். பரலோகத்திற்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார். பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன். பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன். அர்ச்சியசிஷ்டவர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன். பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன். சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். - ஆமென்.

Paralogathaiyum boologathaiyum padaitha ellaam valla pithaavaagiya sarvaesuranai visuvaasikkiraen. Avarudaiya aega suthanaagiya nammudaiya naathar iyaesu kiristhuvaiyum visuvaasikkiraen. Ivar parisutha aaviyinaal karppamaai urpavithu kannimariyidamirundhu pirandhaar. Ponjubilaathin adhigaarathil paadupattu, siluvaiyil araiyundu, marithu adakkam seyyappattaar. Paathaalathil irangi moonraam naal marithoridamirundhu uyirthelundhaar. Paralogathirku elundharuli, ellaam valla pithaavaagiya sarvaesuranudaiya valadhu pakkam veetrirukkiraar. Avvidathilirundhu seeviyaraiyum marithavaraiyum nadutheerka varuvaar. Parisutha aaviyai visuvaasikkiraen. Parisutha kathoolikka thiruchabaiyai visuvaasikkiraen. Archiyasishtavargaludaiya samoodheetha pirayosanathai visuvaasikkiraen. Paavapporuthalai visuvaasikkiraen. Sareera uthaanathai visuvaasikkiraen. Nithiya seeviyathai visuvaasikkiraen. - Aamen.

Prayer List

Our Father - Lord's Prayer
Hail Mary
The Angelus
Glory Be
Apostle's Creed
സ്വര്‍ഗ്ഗസ്ഥനായ ഞങ്ങളുടെ പിതാവേ
The Memorare
എത്രയും ദയയുള്ള മാതാവേ
ത്രിത്വസ്തുതി
Hail Holy Queen
1